முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.எஸ்.ராகவன் உடலுக்கு நடிகர் - நடிகைகள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நேற்று முன்தினம்  சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90 மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட வி.எஸ்.ராகவன் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர். நடித்த சங்கேமுழங்கு, உரிமைக்குரல், சிவாஜி நடித்த சவாலே சமாளி, வசந்தமாளிகை உள்பட 1500 படங்களுக்குமேல் நடித்துள்ளார்.

இளைய தலைமுறை நடிகர்களான கார்த்திக்குடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, விமலுடன் கலகலப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் தாத்தா வேடங்களில் நடித்து வந்தார். வி.எஸ்.ராகவன் மறைவுக்கு அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

வி.எஸ்.ராகவன் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மந்தை வெளியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. வி.எஸ்.ராகவன் உ டலுக்கு நடிகர்கள் சிவகுமார், ராதாரவி, மன்சூர்அலிகான், சார்லி, டைரக்டர்கள் வாசு, சி.வி.ராஜேந்திரன், மனோபாலா, காற்றாடி ராமமூர்த்தி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் நேற்று மாலையில் பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. காஞ்சீபுத்தில் 1925–ல் வி.எஸ். ராகவன் பிறந்தார்.

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்தார். 1954–ல் வைரமாலை என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தார். இவரது மனைவி பெயர் தங்கம் அவர் இறந்து விட்டார். இவருக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர். கிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து