முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்களின் வரலாற்றை மறைக்க நிரபந்தித்தது காங்., அரசு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

குண்டூர் - தேசத் தலைவர்கள் குறித்த வரலாற்று உண்மைகளை மறைக்குமாறு வரலாற்று அறிஞர்களை முந்தைய காங்கிரஸ் அரசு நிர்பந்தப்படுத்தியது என்று மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டூர் அருகிலுள்ள பெனுமாகா கிராமத்தில் நடைபெற்ற நிகவ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வெங்கைய்யா நாயுடு பேசியதாவது:

மாபெரும் தேச பக்தர்களான பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் மற்றும் பலருக்கு இந்திய வரலாற்றில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. டாக்டர் சியாமப் பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, சுபாஷ் சந்திரபோஸ் ஆரியோர் மர்மமான முறையில் இறந்துபோனது பற்றிய தகவல்களும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைக்கபு்பட்டுள்ளன. தேச பக்தர்கள் செய்த தியாகங்களைப் பற்றியும், மர்மமான முறையில் காலமான தேசியத் தலைவர்களைப் பற்றிய தகவல்களையும் மறைத்து விடுமாறு, நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரு குடும்பம் வரலாற்று அறிஞர்களுக்கு நிர்பந்தம் செய்தது.

சோஷலிஸம், கம்யூனிஸம், மேற்கத்திய சித்தாத்தங்களில் நம்பிக்கை கொண்ட வரலாற்று அறிஞர்களும் இத்தகவல்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டனர். இன்றைய இளைஞர்களுக்கு தேசியத்தையும், தேச பக்தியையும் கற்பிக்க வேண்டியது அவசியம். அதேபோல சமுதாயத்தில் நிலவும் ஜாதீய வேறுபாடுகள், பெமண்களுக்கு எதிரான பாகுபாடுகளை வேண்டியது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்களை பாஜக அமல்படுத்தி வருகிறது என்றார் வெங்கைய்யா நாயுடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து