முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிதாப்புக்கு பத்ம விபூஷண் விருது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் , பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 104 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 20 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
 
எல்.கே.அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன், அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துளசி மடத்தின் ஜெகத்குரு ராமானந்த் ஆச்சார்யா உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி , கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரி , பி.வி.ராஜாராமன், மறைந்த ஆர்.வாசுதேவன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து