முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அதிமுக மாணவரணி வீரவணக்க நாள் ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மதுரை - மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாளை முன்னிட்டுமதுரையில்  அதிமுக மாணவரணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

அதிமுக பொதுசெயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அன்னை தமிழுக்காக தன் இன்னுயிரை நீர்த்த மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.ராஜூவ்காந்தி தலைமை தாங்கினார். முன்னதாக தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து 5000 மேற்பட்ட மாணவரணியினர் ஊர்வலமாக புறப்பட்டு தமுக்கம் மைதானத்தை அடைந்து அங்குள்ள  தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுதுறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், ஆர்.சுந்தரராஜன், அதிமுக மாணவரணி துணைச்செயலாளர் சோலை இரா.கண்ணன் ஆகியோர் மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டு தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மொழிபோர் தியாகிகளான  தாளமுத்து, நடராஜன், திருச்சி சின்னசாமி, விராலிமலை சண்முகம், வீரப்பன், இராஜேந்திரன், கீரனூர் முத்து, அரங்கநாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தி மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நடக்க உறுதிஏற்போம் என்று சூளுரை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர்.ராஜாங்கம், வளர்மதி ஜெபராஜ் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் கே.துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, துணைமேயர் கு.திரவியம், மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, பகுதி கழக செயலாளர்கள், தளபதி மாரியப்பன், எம்.ஜெயபால், பூமிபாலகன், வி.கே.எஸ், மாரிச்சாமி, என்.முருகன், தொகுதி கழக செயலாளர்கள் முருகேசன், ரவிசந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள், எஸ்.டி.ஜெயபால், வில்லாபுரம் விஜயகுமார், வக்கீல் தமிழ்செல்வன், வக்கீல் ரமேஷ், புதூர் அபுதாகீர், கே.கலைச்செல்வம், நூர் முகமது, சிலம்பரசன், வக்கீல் ஜான் உட்பட மாணவரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து