முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்புமனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

திருச்சி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்.13ந் தேதி நடைபெற உள்ளது தெரிந்ததே. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ந் தேதி தொடங்கியது.

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் திருச்சியை அடுத்த சோழன்நகரில் உள்ள ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. அதிமுக  வேட்பாளர் வளர்மதி, திமுக வேட்பாளர் ஆனந்த், பாரதிய ஜனதா வேட்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்ரமணியன், ஜனதா பரிவார் கூட்டணி வேட்பாளர் ஹேமநாதன், டிராபிக் ராமசாமி, உள்பட 18 பேர் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

வேட்புமனுதாக்கல் செய்ய இன்று 27ந் தேதி கடைசி நாளாகும். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரை வேட்புமனுதாக்கல் செய்வார் என தெரிகிறது. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அதேபோல நேற்று குடியரசு தின நாள் என்பதால் வேட்புமனுதாக்கல் நடைபெறவில்லை. எனவே வேட்புமனுதாக்கல் கடைசிநாளாகும். நாளை 28ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அதை தொடர்ந்து 30ந் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புவர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

அதோடு 30ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படும். அன்றே வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். வரும் 11ந் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. அதைதொடர்ந்து வரும் 13ந் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. பின்னர் 17ந்தேதி திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனிடையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையட்டி பாதுகாப்புபணிக்காக துணை ராணுவப்படை டெல்லியிலிருந்து வரழைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குச்சாவடிகள் பதட்டத்திற்குரியவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இதுவரை 14 பொது சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. இதில் அதிக பட்சமாக அதிமுக 7 வென்று உள்ளது. திமுக, காங்கிரஸ் தலா மூன்று முறை வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக நடந்த 2011 சட்டசபை பொதுத்தேர்தலில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா இங்கு போட்டியிட்டு சுமார் 42 ஆயிரம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 1400 ஓட்டு இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளது. 138 இடங்களில் 322 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து