முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் அமைதியாக நடந்த குடியரசு தின விழா

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
 
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடந்தது. இதே போல மாவட்ட தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.  காஷ்மீரில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக செல்போன், இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. 2005ம் ஆண்டு ஸ்ரீநகர் பக்சி ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் எஸ்எம்எஸ் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து