முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் சண்டை: 200 பேர் பலி

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கிராமங்களில் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை பிணை கைதிகளாக பிடித்து செல்கின்றனர். கொன்று குவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான மைதுகுரி மீ து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.  அச்சண்டையில் இரு தரப்பிலும் 200 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதற்கிடையே இப்பகுதியில் உள்ள மங்குமனா நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர். வருகிற பிப்ரவரி மாதம் நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.  அந்த தேர்தலை சுமூகமாக நடத்தவும், போகோஹராம் தீ விரவாதிகளை ஒடுக்குவதிலும் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அதற்காக அமெரிக்க வெளியுறவு  மந்திரி ஜான்கெர்ரி நைஜீரியா சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து