முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதம், மொழியின் பெயரால் பா.ஜனதா மக்களிடம் பிளவை ஏற்படுத்துகிறது: இளங்கோவன் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சேவா தள அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

இந்தியா குடியரசு பெற்று உலகளவில் மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா அரசு மதம், மொழியின் பெயரால் மக்களிடம் பிளவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வல்லரசாக உயர்த்த இந்த நாட்டில் இத்தகைய சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷியம், சேவா தள தலைவர் கோவை செல்வராஜ், அமைப்பாளர் எஸ்.எம். குமார், கவிதா கே.முரளி, மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் ஏ.முத்துக்குமார், அகரம் கோபி, புல்லட்சாகுல், அம்மன்கோவில் ராஜி, சித்ரா கிருஷ்ணன், சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.நகர் சர்க்கிள் காங்கிரஸ் தலைவர் நாச்சிகுளம் சரவணன் தலைமையில் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரிகிருஷ்ண ரெட்டி தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் பிருந்தாவனம் கண்ணன், ராஜசேகர், ராஜேந்திரன், தி.நகர் சந்திரன், கலியமூர்த்தி கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து