முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு, விழுப்புரம் 2-வது ரெயில்பாதை பணி மார்ச் மாதம் நிறைவடையும்: பொது மேலாளர் தகவல்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தெற்கு ரெயில்வே சார்பில் குடியரசு தின விழா பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் ராஜேஷ் மிஸ்ரா பேசிய தாவது:

தெற்கு ரெயில்வே 6 கோட்டங்களையும், 5079 கிலோ மீட்டர் தூரம் இருப்பு பாதையையும் கொண்டுள்ளது. 1479 ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் 22 லட்சம் பயணிகளும், 1லட்சம் டன் சரக்குகளும் கையாளப்படுகின்றன.
இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை 304 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. கூடுதலாக 5440 பெட்டிகள் இணைக்கப்பட்டன. மேலும் பயணிகள் நிரந்தர வசதிக்காக 36 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பழனி-பொள்ளாச்சி இடையேயான 63 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து பிராட்கேஜ் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரியலூர்-கள்ளக்குடி, திண்டிவனம்-பேரணி இடையே இருப்புபாதை போடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே உள்ள 102 கிலோ மீட்டர் தூரம் 2-வது ரெயில்பாதை அமைக்கும் பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும். பேசின் பிரிட்ஜில் 5 மற்றும் 6 பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விருதுநகர்-நெல்லை, விழுப்புரம்-காட்பாடி மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் சென்னை-நெல்லை மின்பாதை பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளன.

இதுவரை 675 பெட்டிகளில் ‘‘பயோ-டாய்லட்’’ வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 2021-22 ஆண்டுகளுக்குள் எல்லா பெட்டிகளிலும் இந்த வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ் பெக்டர் ஜெயராமை பொது மேலாளர் பாராட்டினார். விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளரின் மனைவி மஞ்சுளா மிஸ்ரா, அதிகாரிகள் அனந்தராமன், நரசிம்மராவ், லட்சுமணன், பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து