முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்  இன்று  மாலை வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளன. பல்கலைக்கழகத்தின்  www.unom.ac.in  இணையதளம் மூலம் முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.விடைத்தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், நாளை (ஜன.28) முதல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல் மதிப்பெண் மறு கூட்டலுக்கும் புதன்கிழமை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து