முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமாவுடன் சோனியா காந்தி சந்திப்பு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

நாட்டின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர்.
 
டெல்லி ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பின் போது ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் உடனிருந்தார்.  இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த தடை நீங்கி தற்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த தடை நீங்கியுள்ளதாகவும், இந்த விஷயத்தில் முக்கிய தடைக்கல்லாக உள்ள அணுசக்தி இழப்பீட்டு சட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது குறித்தும் காங்கிரஸ் கருத்து தெரிவித்திருந்தது. மேலும் இந்திய அரசின் ஒப்பந்தம் குறித்து முழுமையாக படித்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து