முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் அரிய பரிசு காந்தி: அதிபர் ஒபாமா புகழஞ்சலி

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

உலகின் அரிய பரிசு மகாத்மா காந்தி என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழஞ்சலி சூட்டினார்.
 
மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த ஒபாமாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராஜ்காட்டுக்கு சென்ற அவர் தேசப் பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் ரோஜா மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தலைவணங்கி, கைகளை கட்டிக் கொண்டு சிறிது நேரம் மவுனமாக இருந்தார். இதையடுத்து காந்தியின் புகழ் பெற்ற ராட்டையைப் போன்ற சக்கரத்தை காந்தி நினைவக அதிகாரிகள் ஒபாமாவுக்கு வழங்கினர்.

நினைவகத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் குறிப்பு ஒன்றை ஒபாமா எழுதி உள்ளார். அதில், டாக்டர் மார்டின் லூதர் கிங் கூறியது இன்று உண்மையாகிவிட்டது. மகாத்மா காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிரோட்டமுடன் உள்ளது.

இந்த உலகின் அரிய பரிசு காந்தி. அமைதி, அன்பு ஆகிய அவரது கொள்கைகளை இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமா, கடந்த 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றபோதும் காந்தியை நினைவு கூர்ந்தார். ஒரு முறை தங்களைக் கவர்ந்த மனிதர் (உயிருடன் அல்லது மறைந்த) யார் என்ற கேள்விக்கு, “காந்தி” என பதில் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து