முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்கார ஊர்தி அணிவகுப்பு:காவல் துறைக்கு முதல் பரிசு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

குடியரசு தின அணிவகுப்பில் டி.ஜி.பி அலுவலக மாடலில்   பங்கேற்ற  காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.

66 வது குடியரசு தின விழா சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்றது. இதில்  தமிழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறையின் ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது.  முல்லைப் பெரியாறு அணையை தத்ரூபமாக கண்ணில் நிறுத்திய செய்தி-மக்கள் தொடர்புத் துறை, 15 ஆயிரம் பூக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அன்னப்பறவையை அணிவகுக்க விட்ட தோட்டக்கலைத் துறை ஆகியவற்றுக்கு முறையே இரண்டாம்-மூன்றாம் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

சென்னை கடற்கரை சாலையில்  நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகளின் ஆடல் நிகழ்ச்சியும், 25 அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றன. அதில்,   பாரம்பரிய கலைகள் என்ற தலைப்பில் நடனத்தை அரங்கேற்றிய வேப்பேரி குரு சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரிக்கு முதல் பரிசும், கலைவாழ்வில் ஒற்றுமை என்பதை முதன்மையாகக் கொண்டு நாட்டியம் ஆடிய டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை-அறிவியல் கல்லூரி மாணவியருக்கு இரண்டாம் பரிசும், கும்மியாட்டம் போட்ட  எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் அளவில், கோலாட்டத்தை சிறப்புடன் ஆடிய மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், சலங்கையாட்டம் என்ற வித்தியாசமான ஆட்டத்தை ஆடிய அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசும், தம்புரா நடனம் ஆடிய பாரிமுனை புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டன.

இந்தப் பரிசுகள் அனைத்தும் கிண்டி  ராஜ்பவனில்  நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து