முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ரத சப்தமி கோலாகலம் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதியில் ரத சப்தமி கோலாகலம் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையான் கோயிலில் நேற்று சூரியபிரபை, சின்னசேஷ வாகனம் உள்ளிட்ட 7 வாகணங்களில் சுவாமி வீதி உலா நடைபxபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோறன்சத்தி  போது நாட்களில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகணங்களில் மலையப்பு சுவாமி எழுந்துருளி பாக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சூரிய ஜெயந்தியான் ரதசப்தமி அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலி்பார். இது மினி பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரமோற்சவத்தை காண முடியாத பக்தர்கள் ரத சப்தமியன்று 7 வாகனத்தில் வலம் வரும் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். ரத சப்தமியான நேற்று அதிகாலை மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. 5.30 மணியளவில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் ஏழுந்தருளினார்.

4 மாடவீதி வழியாக சென்று வடமேற்கு பகுதியில் ,சூரிய உதயத்துக்காக காத்திருந்தார். 7.15 மணியளவில் சூரிய கதிர்கள் மலையப்ப சுவாமி மீது விழுந்தன. அப்போது சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழுங்க தரிசனம் செய்தனர். பின்னர் மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். இதைத் தொடர்ந்து கல்ப விருடச் வாகனம், சர்வ பூபாள் வாகனம், சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து