முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அரசை புகழ்ந்து பேசுவதை பீகார் முதல்வர் தவிர்க்க வேண்டும் ஐக்கிய ஜனதா தள கட்சி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

மோடி அரசை புகழ்ந்து பேசுவதை பீகார் முதல்வர் தவிர்க்க வேண்டும் ஐக்கிய ஜனதா தள கட்சி உத்தரவு
பாட்னா, பாஜ தலைமையிலான மத்திய அரசை புகழ்ந்து பேசுவதை பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி தவிர்க்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் முதல்வரான ஜித்தன் ராம் மன்ஜி தனது ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு எதிராக பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். பாஜ கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளமும், அதன் தலைவர் நிதிஷ் குமாரும் கடந்த லோக்சபா தேர்தலுடன் நட்பை முறித்துக் கொண்ட பிறகும் கூட பிரதமர் மோடியை ஜித்தன் ராம் மன்ஜி அடிக்கடி புகழ்ந்து பேசி வருவது கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மூத்த தலைவர்கள் சிலர் இது குறித்து நிதீஷ் குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

மன்ஜியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் நிதீஷ் குமார் இதனை கண்டுகொள்ள வில்லை. நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மன்ஜி, நமக்கு சில தேவைகள் இருக்கின்றன. அது இருக்கட்டும். அதற்காக மத்திய அரசு நமக்கு அளிக்கும் திட்டப்பணிகளை நாம் ஏற்றுக் கொள்வோம். இதற்காக நான் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தற்போது இந்த விவகாரம் மீண்டு கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நிதீஷ் குமாரிடம் இம்முறை தலைவர்கள் சிலர் கண்டிப்பு காட்டினர். இதனையடுத்து மன்ஜிக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கட்சியின் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், மத்திய அரசை தொடர்ந்து புகழ்ந்து பேசுவதை பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே வகுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு பீகாருக்கு அளிக்கும் திட்டங்கள் என்பது நமது உரிமை. அது மத்திய அரசு காட்டும் சலுகை அல்ல என்பதை முதல்வர் மறந்து விடக் கூடாது. மேலும் அவர் கட்சியால் நியமிக்கப்பட்ட முதல்வர் என்பதையும்,  மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல என்பதையும் மன்ஜி மறந்து விடக் கூடாது என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் ஐக்கிய ஜனதா தளத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து