முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க வெற்றிக்கு சபதமேற்போம்: மாணவர் அணி தீ்ர்மானம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாக விளக்கி அண்ணா திமுகவுக்கு அமோக வெற்றி தேடி தருவதென சென்னையில் நடந்த அண்ணா திமுக மாணவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணா திமுக  மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, பழனியப்பன்,உதயகுமார்,  அமைப்பு செயலாளர் செல்வராஜ் எம்.பி. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு சாரா ஒட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
கழகத்தையும், தமிழக மக்களையும் கட்டிக் காத்து வருகின்ற மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்தநாளில் எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை கழக மாணவர் அணி
வணங்கி பிரார்த்தனை செய்வதோடு, சர்வ சமய பிரார்த்தனைகளும் செய்து, அவரது பிறந்தநாளை  "மாணவ சமுதாயத்தின் எழுச்சி நாளாக"" மாணவ சமுதாயமே மகிழ்ந்து கொண்டாடுவது எனவும், அன்னதானம், ரத்த தானம், கண் தானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், கட்டுரைப் போட்டிகள், கவிதை போட்டிகள், ஓவிய
போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது என  தீர்மானித்தது மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகின்ற அரும் பெரும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சென்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலின் வெற்றிக் கனியை  அவரது பொற்பாதங்களில் சமர்ப்பித்திட  மாணவர் அணி சூளுரைஏற்கின்றது.

தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலை மற்றும் சென்னை மணலியில் உள்ள சென்னை உரத்
தொழிற்சாலைகளுக்கும் தொடர்ந்து மானியம் வழங்க வேண்டி விவசாயிகளின் விடிவெள்ளி, மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி மத்திய அரசை வலியுறுத்தி கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.

கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் விளையாட்டு வீராங்கனை சௌமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக  டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 5,00,000/- ரூபாய் (5 லட்சம் ரூபாய்) வழங்க ஆணையிட்டுள்ள கடையேழு வள்ளல்களையும் மிஞ்சிய,  வள்ளல் ஜெயலலிதாவுக்கு  இதயம் கனிந்த
நன்றியினை கழக மாணவர் அணி பொற்பாதம் பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து