முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘செவந்த் சன்’ ஹாலிவுட் படம் தமிழில் ஜன-30-ல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - யூனிவர்சல் பிக்சர்ஸ் இந்தியா இந்தப் புத்தாண்டுக்குப் பாபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ‘செவந்த் சன்’ என்னும் தனது புத்தம் புதிய திரைப்படத்தை வெளியிட உள்ளது. அகாடமி விருது பெற்ற செர்ஜி போட்ரோவ் இயக்கத்தில், ஜெஃப் பிரிட்ஜெஸ், ஜூலியன் மூர், பென் பர்னஸ், கிட் ஹெரிங்க்டன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியத் திரையங்குகளில்  ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது.

‘தி லாஸ்ட் அபெரெண்டிஸ் : ரிவெஞ்ச் ஆஃப் தி விட்ச்’ என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘செவந்த் சன்’ திரைப்படம் சூனியக்க்காரி மதர் மல்கினை (ஜூலியன் மூர்) அமானுஷ்ய திறமைகள் கொண்ட மாஸ்டர் க்ரெகொரி (ஜெஃப் பிரிட்ஜெஸ்) தோற்கடித்ததை விவரிக்கும் கதை ஆகும். சூனியக்காரி சிறையிலிருந்து தப்பித்து பழிவாங்கத் துடிக்கிறாள்.  தனது ஆதாரவளர்களைத் திரட்டி மனித இனைத்திற்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்க்க உத்தரவிடுகிறாள். ஆனால் அவளக்குத் தடையாக இருப்பது ஒரே ஒருவர்தான்.

ஆம் அதுதான் மாஸ்டர் க்ரெகொரி. அவர் தனக்கு உதவியாக டாம் வார்ட்டை (பென் பார்ன்ஸ்) அழைத்துக் கொண்டு பயணிக்கிறார். வழக்கமாகப் பயணிக்கப் பல ஆண்டுகளாகும் என்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான பௌர்ணமிக்குள் விரைவில் செல்லவும், பில்லி சூனியங்களைச் சமாளிக்கவும் டாமுக்குக் கற்றுத் தருகிறார்.

சாகசங்கள் நிறைந்த இத்திரைப்படத்தின் இயக்குனர் ரஷிய எழுத்தாளரான செர்ஜி போட்ரோவ். மிகச் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட அகாடமி விருதுகளுக்காக இவரது ‘பிரிசனர் ஆஃப் தி மௌண்டன்ஸ்’ மற்றும் ‘மங்கோல்’ திரைப்படங்கள் நியமனமாகி உள்ளது. பில்லி பிராட்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் கிட் ஹெரிங்க்டன் ஏற்கனவே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர்களில் ஜான் ஸ்நோவாக நடித்துப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி, அட்டகாசம், சாகசம், பரபரப்பு என அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட ‘செவந்த் சன்’ திரைப்படம் இந்தியா முழுவதும்  ஜனவரி 30 அன்று வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து