முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி பேருக்கு வேலை: சீன பிரதமர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

ஷாங்காய் - சீனா பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதை சரிக்கட்டும் வகையில், சீவாவில் இந்தாண்டு சுமார் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான சீனாவில் கடந்தாண்டு முதல் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. 24 ஆண்டுகளில் கடந்தாண்டுதான் அதிகளவில் அந்நாடு சரிவை சந்தித்துள்ளது. அங்கு வேலையில்லா திண்டாட்டம், சொத்துக்கள் விற்பனையில் மந்தம், பெரும் நிறுவனங்களின் பங்குகள் சரிவு போன்றவை ஏற்பட்டது. இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வட்டி விகிதத்தை பெருமளவு அந்நாட்டு அரசு குறைத்தது. இந்நிலையில், பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையிலும், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையிலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தாண்டில் சுமார் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மையை 4,6 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சீனாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பை அதிகரிப்பது என்றும், அதற்காக இந்தாண்டு சுமார் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்தாண்டுக்கான பொருளாதார சீர்திருத்த மாநாட்டில் கலந்து கொண்ட சீன பிரதமர் லி கெகியாங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து