முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி பற்றாக்குறை: ஆந்திராவில் பீர் விலை உயர்கிறது

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

திருமலை - ஆந்திராவில் பீர் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினைக்கு பிறகு புதிய ஆந்திராவில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஆந்திர மாநில தலைநகர் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு சங்கங்களிடம் நிதி திரட்டி வருவதுடன் நஷ்டத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

ஆந்திராவில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு பீர் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், வருவாயை பெருக்க மதுபானங்களின் விலையை உயர்த்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் மதுபான உற்பத்தி குறைந்துள்ளதால் தெலங்கானாவில் இருந்து மதுபானங்கள், புதுச்சேரியில் இருந்து பீர் பாட்டில்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஆந்திர மாநில அரசு மது உற்பத்தியை பெருக்கவும், நஷ்டத்தை போக்கவும், பீர் விலையை 55 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் வரும்படி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து