முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி: ஆன்லைன் டிக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் கூடுதலாக டிக்கெட் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக கோயில் இணை செயல அலுவலர் சீனிவாசராஜூ கூறியதாவது:

ரத சப்தமியையொட்டி மலையப்பசுவாமி 7 வாகனங்களில் நேற்று முன் தினம் காலை முதல் இரவு வரை வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பொறுப்புடன் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தந்ததனர். இதில் 92 ஆயிரத்து 21 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு இரவு வரை வைகுண்டம் காம்ப்ளக்சில் பக்தர்கள் யாரும் இல்லை. இரவு வரை பக்தர்கள் காத்திருந்ததால் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.

இதேபோல் நான்கு மாடவீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. ரத சப்தமி அன்று ஏராளமான பக்தர்கள் வந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து தரிசனம் செய்ததன் மூலம், வருங்காலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் முக்கிய உற்சவங்களும் பக்தர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தப்படும். 2மணி நேரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக ரூ.300க்கு நுழைவு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையானதால் இன்னும் 3 நாட்களில் ரூ.300க்கான டிக்கெட்டை ஆன்லைனில் கூடுதலாக விற்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். பக்தர்கள் முன்கூட்டியே ஆலோசனை செய்து திட்டமிட்டு இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம் 2 மணி நேரத்தில் எவ்வித சிரமம் இன்று சுவாமியை தரிசனம் செய்யலாம். மேலும் இலவச தரிசனத்தில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் வெகு நேரம் காத்திருப்பதால், அவர்களுக்கான அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் மூலம் செய்து தரப்படும். இவ்வாறு சீனிவாச ராஜூ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து