முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா - ஜெட்லி சந்திப்பை கொச்சைப்படுத்திய கருணாநிதிக்கு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா- நிதியமைச்சர்  அருண்ஜெட்லி சந்திப்பை பொறுத்து கொள்ள முடியாமல் கொச்சைப்படுத்தி வரும் கருணாநிதி - இளங்கோவனுக்கு அண்ணா திமுக அமைப்பு சாரா ஒட்டுனர் அணி  சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணா திமுக   அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் , சென்னையில் உள்ள அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒட்டுநர் பிரிவின் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அண்ணா திமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஆர்,பி. உதயகுமார், அண்ணா திமுக ஆலோசகர் சி.பொன்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழை எளிய மக்களின் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்றும் அந்நாளில் முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு சென்று சிறப்பு விருந்து வழங்கவும் முதியோருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குவதென முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் உலக மகா  ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்த திமுக  கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஆ.ராசா சிறையில் இருந்த போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , கருணாநிதியை அவரது சி.ஜ.டி காலனி வீட்டிற்கே சென்று சந்தித்தார். , ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார்.

இதையெல்லாம் மறந்து  விட்டு மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேரில் சந்தித்ததை பொறுத்து கொள்ள முடியாமல்  கொச்சைப்படுத்தி வரும்  கருணாநிதியும்   தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோருக்கு  அண்ணா திமுக அமைப்பு சாரா ஒட்டுனர் அணி கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து