முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை பயணம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இலங்கையில் சமீபத்தில்  நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த மகிந்த ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார். வடக்கு– கிழக்கு மாகாண தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்ததால் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆன புதிய அரசு இலங்கையின்  மேம்பாட்டுக்காக பல புதிய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஈழ தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் 13–வது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற சிறிசேனா சம்மதித்துள்ளார். இது இலங்கை தமிழர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்தியாவில் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலங்கை வெளியுறவு மந்திரி சமீபத்தில் டெல்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்தார்.

இலங்கையின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மோடியின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை இருநாட்டு தூதரக அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.வருகிற மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம்  உறுதிபடுத்தியது. இதை தெரிவித்த இந்திய தூதரக பத்திரிகை தொடர்பு செயலாளர் ஈஷா ஸ்ரீவத்சவா பிரதமர் மோடி எந்த தேதியில் இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொள்வார் என்று இன்னமும் உறுதியாகவில்லை என்றார்.

என்றாலும் மார்ச் மாதம் 14, 15–ந்தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை செல்ல 99 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.1987–ம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு இதுவரை எந்த பிரதமரும் அரசு முறை பயணமாக இலங்கை செல்லவில்லை.2008–ம் ஆண்டு மன்மோகன் சிங் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவே இலங்கை சென்றார். எனவே பிரதமர் மோடியின் பயணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை செல்லும் பயணமாக இருக்கும்.

இலங்கை புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள மைத்திரிபால சிறிசேனா, அடுத்த மாதம் (பிப்ரவரி) 16–ந்தேதி இந்தியா வருகிறார்.  19–ந்தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியும், சிறிசேனாவும் ஈழ தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதித்து தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிறிசேனாவின் நடவடிக்கைகளால் ஈழ தமிழர் விவகாரங்களில் இணக்கமான சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழர் பிரச்சினைக்கு மோடியும் சிறிசேனாவும் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பிரதமர் ரணில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி கொடுத்து வரும் ஒத்துழைப்பு பயன் உள்ளதாக இருப்பதாக ரணில் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவும் இலங்கையும் நன்கு நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று இருப்பவர்களை மீண்டும் இலங்கை அழைத்து வரும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. இதற்காக உலகளாவிய முயற்சிகளை இலங்கை புதிய அரசு மேற்கொண்டுள்ளது.இதையடுத்து இலங்கை மீண்டும் குடியமர ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. சபையும் உதவிகள் செய்ய முன் வந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து