முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மரியாதையுடன் ஆர்.கே. லட்சுமண் உடல் தகனம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மரணமடைந்த கார்ட்டூ னிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. 
புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவதில் சிறந்தவர். திருவாளர் பொதுஜனம் என்ற பெயரில் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் வெளியிட்டு பணியாற்றியுள்ளார். புனேயில் வசித்து வந்த அவருக்கு கடந்த 2003ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இடது கை செயல் இழந்தது. வலது  கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார். 60 ஆண்டுகளாக பத்திரிகைகளில் பணியாற்றி வந்தார்.
 
94 வயதாகும் ஆர்.கே. லட்சுமண் சிறுநீரக கோளாறு காரணமாக புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஆர்.கே. லட்சுமண் உடல் தகனம் நேற்று புனேயில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

முன்னதாக மராட்டிய முதல்வர் தேவேந்திர ப ட்னாவிஸ் புனே சென்று லட்சுமண் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.கே. லட்சுமண் 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி மைசூரில் பிறந்தார்.  இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் அவர் மைசூர் மகாராஜா மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் மைசூரில் குடியேறினார். அங்கு ஆர்.கே. லட்சுமண் பிறந்தார். பத்திரிகைகளில் பணியாற்றும் போது தனது பெயரு டன் பூர்வீக ஊரை குறிப்பிடும் வகையில் ராசியிம் கிருஷ்ணசாமி அய்யர் லட்சுமண் என குறிப்பிடும் வகையில் ஆர்.கே. நாராயண் என வைத்துக் கொண்டார்.

இவருக்கு மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே. லட்சுமண் உட்பட 5  சகோதரர்கள், 5 சகோதரிகள். ஆர்.கே. லட்சுமண் நடன கலைஞரும், நடிகையுமான குமாரி கமலாவை திருமணம் செய்தார். 1960ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்பு ஆர்.கே. லட்சுமண் மறுமணம் செய்தார். 2வது மனைவி பெயரும் கமலா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாஸ் என்ற மகள் இருக்கிறார். ஆர்.கே. லட்சுமண் மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளும், பத்திரிகை துறையில் 60 ஆண்டு பணிக்காக மகாசேசே விருதும் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து