முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாராம் பாபு வழக்கு: பாதுகாப்பு கேட்கும் சாட்சி

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

முசாபர்நகர் - சர்ச்சைக்குரிய சாமியார் அசாராம் பாபு மீது தொடரப்பட்டுள்ள பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியின் மனைவி தனது குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படி குஜராத் மாநில போலீசாரிடம் கோரி உள்ளார்.
 
அசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த அவரது தனி உதவியாளர் அகில் குப்தா, பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது முசாபர்நகர் பகுதியில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி வர்ஷா தனது குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கும்படி குஜராத் மாநில போலீசாரிடம் கோரி உள்ளார்.
 
உத்தர பிரதேச மாநில போலீசார் எங்களுக்கு அளித்து வரும் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை. அவர்கள் எனது கணவரை கொலை செய்த குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்காதது ஏமாற்றமளிக்கிறது. எனவே எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் குஜராத் மாநில போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கும் படி அசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியிடம் கோரி உள்ளேன் என்று வர்ஷா தெரிவித்தார்.
 
குஜராத் மாநிலம் சூரத்தில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாராம் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை அந்த மாநிலத்தில் காந்திநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து