முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: 34 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 13ந்¤ தேதி நடைபெற உள்ளது. இதையட்டி வேட்புமனுதாக்கல் திருச்சி தாலுகா அலுவலகத்திலும், திருச்சியை அடுத்த சோழன்நகரில் உள்ள ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் கடந்த 19ந் தேதி முதல் 27ந் தேதிவரை நடைபெற்றது. கடைசி நாளன்று மட்டும் 29 பேர் மனுதாக்கல் செய்தனர்.
 
இந்தநிலையில் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மனோகரன், தேர்தல் ஆணையத்தின் பொதுப்பார்வையாளர் பால்கர்சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வேட்பாளர்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் இந்த வேட்புமனு பரிசீலனையில் கலநதுகொண்டனர்.
முதலில் அதிமுகவேட்பாளர் வளர்மதி, திமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர்களது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் பாரதிய ஜனதா வேட்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியனின் வேட்பு மனு பரிசீலனைக்கு தேர்தல் அதிகாரி எடுத்துக்கொண்டார். அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கங்கைசெல்வம் பாரதிய ஜனதா வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 
மேலும், சுப்பிரமணியன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவில் 2 வழக்குகளும், திருச்சி உறையூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதுசம்மந்தமான விபரங்களை பிராமண பத்திரத்தில் வேட்பாளர் சுப்பிரமணியன் தெரிவிக்கவில்லை எனக்கூறி ஆட்சேபனை செயதார்.
 
அப்போது பாரதிய ஜனதா வேட்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு என்பவர் இந்த வ-ழக்குகளில் குற்றப்பத்திரிக்கை எதுவம் தாக்கல் செய்யவில்லை. இன்னமும் இவ்வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. வெறும் எப்.ஐ.ஆர். போட்டநிலையிலே இவ்வழக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

இதனால் குழப்பமடைந்த தேர்தல் அதிகாரி பாரதிய ஜனதா வேட்பாளர் மீதான வழக்கு குறித்து டெல்லி தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக்கூறி விளக்கம் கேட்டு பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து பிற்பகலில் பாரதிய ஜனதா வேட்பாளர் மீதான வேட்புமனுக்குறித்தி தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

அதன்விபரம் வருமாறு, தற்பொழுது பிஜேபி வேட்பாளர் மனுவை ஏற்றுக்கொள்கிறோம். அவர்மீதான வ-ழக்கு விசாரணையை கோர்ட் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் பிரச்சனை முடிந்தது. பின்னர் எல்லா மனுக்கள் மீதும் பரிசீலனை நடைபெற்றது.

இறுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 48 பேர்களின் மனுக்களில் சுயேட்சை வேட்பாளர்கள் குமாரசாமி, ராஜேந்திரன், செல்லத்துரை, நூர்முகமது. ஜெயராஜ் உள்பட 12 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகார் தள்ளுபடி செய்தார். மீதமுள்ள 34 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள இறுதிநாள் நாளை 30ந் தேதி ஆகும். அன்றைய தினம் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டதும் இறுதியாக ஸ்ரீரங்கம் தேர்தல் களத்தில் உள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அன்றைய தினமே எல்லா வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து