முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அரசியல் கட்சிகள் மீது 132 வழக்குகள் பதிவு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 132 வழக்குகளை பதிவு செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேர்கொண்டுள்ளது.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி 7ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் கட்சிகள் உச்ச கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் பொது மேடைகளில் விளாசி தள்ளி வருகின்றனர். மேலும் பரபரப்பான காட்சிகளுக்கும் பஞசம் இல்லை. எனவே இவற்றை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் விதிமுறை மீறல் தொடர்பாக டெல்லியில் அரசியல் கட்சிகள் மீது இதுவரை 132 வழக்குகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதிகபட்சமாக 52 வழக்குகல் பதிவான கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி தட்டிச் சென்றுள்ளது. எப்போதும் விதிமுறைகளை மதிப்பதாகவும், சட்ட நெறிகளை பின்பற்றுவதாகவும் கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி மீது இம்முறை அதிகபட்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜ மீது 28 வழக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மொத்தம் 17 ஆயிரத்து 370 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உரிமம் பெற்ற 378 பேரிடம் இருந்தும், உரிமம் பெறாமல் பதுக்கி வைத்திருந்த 28 பேரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1104 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 1686 பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். 32 ஆயிரத்து 334 மதுபான பாட்டில்களையும், 600க்கும் மேற்பட்ட நாட்டு சாராய பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து