முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்னோஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு உதவி நிதியை அதிமுக எம்பிக்கள் வழங்கினர்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - மூளை மற்றும் நரம்பு பாதிப்பு நோயால் அவதிபடும் மேற்கு வங்க ஜிம்னோஸ்டிக்ஸ் வீராங்கனை செளமிதா டே யின்  மருத்துவ செலவுக்காக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வழங்கிய ரூ 5 லட்சம் உதவி நிதியை அதிமுக எம்பிக்கள் வேணுகோபால் மற்றும் செங்குட்டுவன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து வழங்கினர்.

இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஜிம்னேஸ்டிக்ஸ் வீராங்கனை சௌமிதா டே, மூளை மற்றும் நரம்பு பாதிப்பு தொடர்பான நோயினால் தாக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருவதையும், அவர் தனது மேல் சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதையும் பத்திரிகைச் செய்தி வாயிலாக அறிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்கள் முதல்வர் ஜெயலலிதா , சிகிச்சை பெற்று வரும் சௌமிதா டேயின் மருத்துவ செலவுகளுக்காக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என 24.1.2015 அன்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்கள் முதல்வர், ஜெயலலிதாவின்  மேலான ஆணையின்படி, அதிமுக  மருத்துவ அணிச் செயலாளரும், கழக நாடாளுமன்ற
குழுத் தலைவருமான டாக்டர் பி. வேணுகோபால், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  செங்குட்டுவன் ஆகியோர் கொல்கொத்தாவில் சிகிச்சை பெற்று வரும்  சௌமிதா டே  நேற்று நேரில் சந்தித்து  ஜெயலலிதா வழங்கிய 5 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையினையும்,  சௌமிதா டே விரைவில் குணமடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தினைத் தெரிவித்து அனுப்பிய கடிதத்தினையும் வழங்கினார்கள். அப்போது  சௌமிதா டே மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியினை மக்களின்முதல்வர் ஜெயலலிதாவுக்கு  கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து