முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

பழநி - பழநி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழந்து கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேதி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர்.

இத்திருவிழாவிற்கு ஜனவரி மாத துவக்கத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்துவங்கி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் துவங்கியது. இதையொட்டி வள்ளி- தெய்வானை சமேதரரான முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

வளர்பிறை நிலவு, சூரியன், வேல், மயில், சேவல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞசள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களின் ஆரோகரா கோஷம் முழங்க மீன லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் பழந்து கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, வேணுகோபாலு எம்எல்ஏ, நகராட்சி தலைவர் வேலுமணி, துணை தலைவர் முருகானந்தம், ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, சித்தநாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கன்பத் ஓட்டல்ஸ் குழும தலைவர் ஹரிஹரமுத்து, கட்டிடவியல் வல்லுநர் நேரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக் குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக் கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சி பிப்ரவரி 2ம் தேதி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக பிப்.3-ம் தேதி தைப் பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா நடைபெறும் 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கிராமிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து