முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உதவியுடன் இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டி

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அமெரிக்காவின் உதவியோடு, இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு, இரு நாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், பல்வேறு உயர்தர வசதிகளை உள்ளடக்கி, 100 ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, பல லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக, தனியார் துறை மற்றும் வெளிநாடுகளிலும் உதவிகள் கோரப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியோடு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத், ராஜஸ்தானின் அஜ்மீர், ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களை, ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், அமெரிக்க வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியோடு செயல்படுத்தப்படும். இதற்கான செயல்திட்டம் 3 மாதங்களுக்குள் உருவாக்கப்படும்.

இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடைய இந்தியப் பயணம், கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அன்னிய முதலீடுகள் இருக்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து