முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டித்தேர்வு பட்டியல் நாளை வெளியாகிறது

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வு நாளை  வெளியாகும் என்று அதன் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு நேற்று நடைபெற்றது. இவர்களுக்கு கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ( பொறுப்பு) பாலசுப்ரமணியம் இளவரசன்( தர்மபுரி ) ரேவதி ( பல்லாவரம்) மற்றும் கணேசன் ( ஈரோடு ) ஆகியோருக்கு பணியிட ஆணைகளை வழங்கி கலந்தாய்வை தொடங்கி வைத்தார். இந்த கலந்தாய்வு வரும் பிப்ரவரி 12 ந்தேதி நடைபெறுகிறது.

2 ஆயிரத்து 234 பேருக்கான பணியிடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 239 பேருக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் பட்டியல் நாளை ( 30 ந்தேதி) வெளியிடப்படும்.

இதில் சென்ற ஆண்டு நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்து விவரங்கள் வெளியாகும் . குருப் 1 தேர்வு முடிவுகள் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 2 வாரத்தில் வெளியிடப்படும். 444 பணியிடங்களுக்கான உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கான வரும் ஏப்ரல் மாதம் 18 ந்தேதி நடைபெறும் இரண்டாண்டு வேளாண் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். வேதியியல் குறித்த 100 பணியிடங்களுக்கான தேர்வு குறித்தும் விரைவில் அறிவிக்கை வெளியாகும்..குரூப் ஒன்றில் 50 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து நான்காவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து