முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளை மோடி அரசு கண்டு கொள்வதில்லை: ராகுல்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஏழை மக்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு கண்டுகொள்வதில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கடந்த 8 மாதங்களாக பிரதமர் மோடி நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில்தான் அவர் தீவிரமாக உள்ளார். அது மட்டுமல்லாது, தொழிலதிபர்களுக்கு சாதகமாக அவர் செயல்பட்டு வருகிறார்  என்று காங்கிரஸ் கட்சியின்  துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி உருப்படியாக மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. பேசிப் பேசியே காலம் கழித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி எப்போது பணியை தொடங்குவார் என்று தெரியவில்லை என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சில தொழிலதிபர்களுக்கு மட்டும் மோடி சாதகமாக செயல்படுகிறார். ஏழைகளை மோடி அரசு கண்டுகொள்வ தில்லை. கடந்த 8 மாதங்களில் மக்களுக்காக அவர் எதுவுமே செய்யவில்லை. ஆம் ஆத்மி கட்சியும் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. ஏழைகளின் மீது அக்கறை கொண்டுள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. இந்த கட்சி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாங்கள் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து