முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அணிவகுப்பை பார்வையிட புடினை அழைக்க திட்டம்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் - இந்தியாவுக்கு போட்டியாக ராணுவ அணிவகுப்பை பார்வையிட புடினை அழைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஒபாமா ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். ஒபாமாவின் இந்திய வருகை அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை அச்சத்திலும் எரிச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஒபாமாவின் இந்திய பயணம் குறித்த செய்திகளே முக்கிய இடம் பிடித்தன. இதனால் கடும் எரிச்சலடைந்த சீனா இந்தியாவுக்கு போட்டியாக தனது நாட்டின் ராணுவ அணிவகுப்பில் வெளிநாட்டு தலைவரை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் முக்கிய எதிரியான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினை சிறப்பு விருந்தினராக அழைத்து வர திட்டமிட்டுள்ளது.

அதற்கான அறிவிப்பை சீன அரசு வெளியிட்டுள்ளது. அங்கு சீன மக்கள் குடியரசு உருவான 1949ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை 2ம் உலகப் போரில் வெற்றி பெற்ற 70ம் ஆண்டு விழா கொண்டாட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பினை பார்வையிட புடின் அழைக்கப்படவுள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே தீவிரமாக தொடங்கியுள்ளன. இந்த தகவலை சீன பாதுகாப்பு துறை தலைவர் புஷென்குவா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து