முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்திற்கு பாக்., எதிர்ப்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல்லுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சிரிகோட்டை அரங்கில் நடந்த கூட்டத்தில் ஒபாமா பேசினார்.

அப்போது அவர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் என்று பேசினார். ஒபாமாவின் இந்த  அறிவிப்பு பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு இப்படி ஒரு ஆதரவு அளித்தால் அது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் என்று கூறியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தார் அஜிஸ் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து