முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக நேரம் அமர்ந்திருந்தால் இருதய நோய் தாக்குமாம்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

கனடா - கனடா நாட்டு மருத்துவ ஆய்வு கழகம் சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வை நடத்தியது. இதில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய், நீரழிவு நோய், புற்று நோய்  அதிகம் தாக்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக ஆய்வு குழு தலைவர் டேவிட் ஆல்டர் கூறுகையில்,
 
சராசரியாக ஒரு மனிதனின் பாதிக்கும் மேற்பட்ட பகல் நேரம் டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ உட்கார்ந்தவாறே கழிகிறது. அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் கூட இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் தாக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது. உடற்பயிற்சி செய்யாதவர்களையும் மிதமான உடற்பயிற்சி செய்பவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது.

அதிகளவில் உடற்பயிற்சி செய்பவர்களை இந்த நோய்கள் குறைவாகவே தாக்குகின்றன. எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களை இந்த நோய்கள் தாக்காது என்பதை அறிய மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த வேண்டும். எனவே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து