முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்த மருத்துவ டாக்டர்கள் முறையாகப் பதிவு செய்துள்ளனரா?

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் சித்த மருத்துவ டாக்டர்கள் ஐந்து பேர் முறையாகப் பதிவு செய்துள்ளனரா என்பது குறித்து விளக்கம் பெற சுகாதாரத் துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த எஸ்.பாலசந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
குணப்படுத்த முடியாத பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதாக சென்னையைச் சேர்ந்த டாக்டர்கள் கே.சக்திராஜேந்திரன், சத்தார், என். செல்வராஜ், திருவள்ளூரைச் சேர்ந்த டாக்டர் என்.சண்முகம், கோவை பி.ஜெயகுமார் ஆகியோர் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்கின்றனர்.

இவர்கள் அளிக்கும் சிகிச்சைகளால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும், பணமும், கால விரயமும் ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் முறையான தகுதி வாயந்தவர்களா என்பது தெரியவில்லை.   இந்திய மருத்துவ வாரியத்தில் பதிவேட்டில் இவர்கள் ஐவரின் பெயர்கள் இடம்பெறவில்லை.  எனவே, டாக்டர்கள் ஐவரும் முறையாக மருத்துவப் பதிவு செய்துள்ளார்களா, மருத்துவச் சான்றிதழ்கள் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

அதன் பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேணடும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரால் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள டாக்டர்கள் ஐந்து பேர் மருத்துவ சேவை செய்வதற்கு தகுதியுள்ளவர்களா? என்பது குறித்து, சித்த மருத்துவ டாக்டர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பிடம் சுகாதாரத்துறை செயலர் உரிய விளக்கம் பெறவேண்டும்.

இது தொடர்பான நடவடிக்கையை 2 மாதத்துக்குள் சுகாதாரத் துறைச் செயலர் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து