முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி பஞ்சப்புூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இங்கு வாக்கு  எண்ணிக்கை நடைபெற போதிய வசதிகள்  செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட தேர்தல் அலுவலர்; மற்றும் மாவட்ட கலெக்டருமானடாக்டர்.கே.எஸ்.பழனிசாமி   முன்னிலையில்,  தேர்தல் பொதுப்பார்வையாளர் டாக்டர் பால்கார் சிங், இ.ஆ.ப,  இன்று (28.01.2015) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 13.02.2015 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை  நடைபெறவுள்ளது.

இதற்க்காக 138 வாக்குப்பதிவு மையங்களில் 322 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாக மண்டல அலுவலரின் கண்காணிப்பில் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் (ளுவசழபெ சுழழஅ) புூட்டி சீல் வைக்கப்படும்.  மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

இம்மையத்தில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முகவர்கள் கண்காணிக்க மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், தேர்தல் பார்வையாளர் அறை, ஊடக அறை ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப்பார்வையாளர்  விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
 
இந்த ஆய்வின்போது மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சரோஜ்குமார் டாகுர்  உதவி ஆணையர் (நுண்ணறிவு) வெங்கட்ரமணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரபீந்தர், உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ரவிக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து