முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதச்சார்பின்மை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

சென்னை - மத்திய அரசு வெளியிட்ட விளம்பரம் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் மதச்சார்பின்மை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.

குடியரசு தின விழாவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல்பக்கத்தில் இடம் பெற்றிருந்த மதசார்பின்மை, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. திட்டமிட்டே இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில் விளம்பரத்தில் இரு வார்த்தைகளும் இடம்பெறாததை சிவசேனா வரவேற்றுள்ளது.

மதசார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் திட்டமிட்டு நீக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில் இந்த வார்த்தைகள் இடம்பெறவில்லை. 1976ம் ஆண்டுக்கு பின்னர்தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆரம்ப கால நடைமுறைதான் தற்போது பின்பற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மதசார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் இல்லாமல் விளம்பரங்கள் வந்துள்ளன, என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு நேற்று அளித்த பேட்டியில், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை பாஜ முழுமையாக கடைபிடித்து வருகிறது. மதசார்பின்மை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் தேவையில்லாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து