முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார் உரிமையாளர்களிடம் பணம் வாங்கிய 4 அமைச்சர்கள்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் பார் உரிமையாளர்களிடம் 4 அமைச்சர்கள் பணம் வாங்கியதாக ஒலிநாடா வெளியாகி அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் தரமில்லாத 418 மது பார்கள் மூடப்பட்டன. இதற்கு அந்த மாநில நிதி அமைச்சர் கே.எம். மாணி ரூ.5 லட்சம் கேட்டதாகவும், முதற்கட்டமாக ரூ.1 கோடி கொடுத்ததாகவும் கேரள பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிஜூ ரமேஷ் கூறினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்.

இதனால் அமைச்சர் மாணி பதவி விலக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. அமைச்சர் மாணியை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன் பாஜ சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், அமைச்சர் மாணி திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,  பார் உரிமையாளர்களிடம்  இருந்து பணம் வாங்கவில்லை. முதலில் வெளியான ஒலிநாடா போலி என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி பொச்சி அருகேயுள்ள பாலாரிவட்டம் பகுதி பார் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் நடந்த விவாதம் தொடர்பாக ஒரு ஒலிநாடா சில மலையாள தனியார் தொலைக் காட்சிகளில் வெளியிடப்பட்டது.

அந் ஒலி நாடாவில், நிதி அமைச்சர் மாணி மட்டுமல்லாமல் 4 காங்கிரஸ் அமைச்சர்களும் பணம் வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை தேவைப்படும் நேரத்தில் வெளியிட வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் பேசியது தெளிவாக உள்ளது. தேவைப்பட்டால் 4 காங்கிரஸ் அமைச்சர்களின் பெயர்களை வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.

ஆனால் 4 அமைச்சர்களும் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கெஞ்சியதால் தற்போது பெயரை கூறவில்லை எனவும் பார் உரிமையாளர் ஒருவர் பேசியது பதிவாகியுள்ளது. இந்த ஒலி நாடா வெளியிடப்பட்டுள்ளதால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து