முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண்பேடிக்கு 2 வாக்காளர் அட்டையா? விசாரணை

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. பாஜ, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜ முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரண்பேடிக்கு உதய்பார்க், தல்கதோரா ஆகிய 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வேட்புமனு தாக்கலின்போது உதய் பார்க் குடியிருப்பு பகுதி முகவரி அடங்கிய வாக்காளர் அடையாள அட்டையை கிரண்பேடி சமர்ப்பித்தார்.

இந்நிலையில், கிரண்பேடிக்கு 2 அடையாள அட்டை இருப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் போலியாக வாக்காளர்களை சேர்த்து வருவதாக எங்களை பாஜ குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி 2 வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்பதை அக்கட்சி கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் பிரச்னை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து