முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அகதிகள் விவகாரம்: இன்று ஆலோசனை

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். கடந்த 1983ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி முதல் இதுவரை தமிழகத்துக்கு நான்கு கட்டங்களாக, 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரக உதவியுடன் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளனர்.

தற்போது, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை தாயகம் திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இருநாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அதிகாரிகள் நேற்று இந்தியா வந்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இலங்கை அகதிகளை தாயகம் திருப்பி அனுப்புவது குறித்து இருதரப்பிலும், பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தாயகம் திரும்புமாறு இங்கிருக்கும் அகதிகளை கட்டாயப்படுத்த முடியாது. அவர்கள் விருப்பப்பட்டால் தாயகம் செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளோம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து