முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் உலக கோப்பை கிரிக்கெட் ரன்னிங் கமென்ட்ரி

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ரன்னிங் கமென்ட்ரி கேட்டு போட்டியை பார்த்து ரசிக்கலாம் என விஜய் டிவி தனது இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

பிப்ரவரி 14-ஆம்தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் முதல் போட்டியும், மார்ச் 29-ஆம்தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியும் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று விக்டோரியாவின் சுற்றுலா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஜான் எரேன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 12-ஆம்தேதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதேபோல், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னிலும் ஆடல்பாடலுடன் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இந்த தொடக்கவிழாவில் உலகக்கோப்பை வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இந்தி, ஆங்கிலத்தில் ரன்னிங் கமென்ட்ரி கேட்ட தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழில் ரன்னிங் கமென்ட்ரியுடன் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து