முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதின் கட்காரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மத்திய அமைச்சர் நிதின்கட்காரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உயர் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு உச்சகட்டமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக தனி கமாண்டோ படையே உருவாக்கப்பட்டுள்ளது.  மத்தியில்  பா.ஜ.க.  தலைமையில் புதிய அரசு  அமைந்த பிறகு தலைவர்களுக்கு வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பை குறைக்க போவதாக அறிவித்தது. மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவிர வேறு கேபினட் அமைச்சர்கள் யாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. 

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர்  நிதின்கட்காரிக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை இசட் பிளஸ் ஆக தரம் உயர்த்த வேண்டும் என  4 மாதங்களுக்கு முன்பு நிதின்கட்காரி உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை அப்போது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத்  முண்டே கார்  விபத்தில் காலமானார். இதை தொடர்ந்து நிதின்கட்காரிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை  அதிகரிக்க வேண்டும் என   மகராஷ்டிர பா.ஜ.க.வினர்  மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து நிதின் கட்காரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.    இதே போல் இணை  அமைச்சராக உள்ள  ஜிதேந்திர சிங்  அடிக்கடி காஷ்மீர் சென்று வருவதால்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக உள்துறை வட்டாரங்கள்  தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து