முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டூரில் 29 கிராமங்களில் பயிர் செய்ய ஆந்திரா தடை

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

நகரி - ஆந்திர மாநிலத்துக்கு விஜயவாடா - குண்டூர் இடையே புதிய தலைநகர் அமைக்கப்படுகிறது. இதற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் குண்டூர் அருகே விவசாய  நிலங்களை கொடுக்க விவசாயிகள் மறுத்து வருகிறார்கள். இதற்காக போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
 
இந்த நிலையில் குண்டூர் அருகே 3  மண்டலத்தில் உள்ள 29 கிராமங்களில் இனிமேல் விவசாயம் செய்ய ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. இந்த வருடத்துடன் விவசாயத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும் அடுத்து பயிர் செய்ய கூடாது என்றும் நில சேக ரிப்பு குழு தலைவர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இந்த கிராம விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூ டாது என்றும் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 29 கிராமங்களில் 51,788 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில் 41,750 ஏக்கர் நிலத்தில் தற்போது பயிர் செய்யப்பட்டு வருகிறது. வாழை, மஞ்சள், கருணை கிழங்கு, மக்சாச்சோளம் மற்றும் பயிர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 90 ஆயிரம் முதல்  ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த நிலங்களை அரசு கையகப்படுத்துவதால் தற்போதுள்ள பயிருடன் விவசாயத்தை  நிறுத்தி விட வேண்டும் என்றும் இனிமேல் பயிர் செய்ய கூடாது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

அரசுக்கு நிலம் வழங்கும் விவசாயிக்கு தரிசு நிலம் என்றால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும், சாகு படி நிலம் என்றால் ஏக்கருக்கு ரூ.  50 ஆயிரமும் நிவாரண உதவியாக அரசு வழங்குகிறது. மேலும் விவசாயிகளின் ரூ . ஒன்றரை லட்சம் வரையிலான வங்கி கடனும் ரத்து செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து