முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு - நிதீஷ் தேர்தலை தனியாக சந்திக்க முடிவு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது பீகாரில் அமோக வெற்றி பெற்ற பாஜக, சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

பாஜகவை முறியடிக்க லல்லு பிரசாத், நிதீஷ்குமார் ஒன்று சேர்ந்தனர். அரசியலில் எதிரிகளாக இருந்த அவர்கள் சட்டசபை தேர்தலில் புதிய கூ ட்டணியாக நிற்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டணி சார்பில் வரும் 1 5ம் தேதி மிக பிரம்மாண்டமான மாநாட்டுக்கும் ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் உள்ளது. இந்த நிலையில் லல்லு, நிதீஷ்குமார் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக நிதீஷ்குமார் அறிவித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லியில் காங்கிரசுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று லல்லு கூறியதை நிதீஷ்குமார் ஏற்கவில்லை. இதையடுத்து பீகார் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக லல்லு அறிவித்துள்ளார். இது பற்றி லல்லு கூறுகையில், யார் வந்தாலும் போனாலும் சரி, நான் தனித்து போட்டியிடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து