முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவின் தலையை துண்டிப்போம்: ஐ.எஸ் தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணையதளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமுடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்தீஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது.

அதில் இஸ்லாமுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதிதான். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிபர் ஒபாமாவின் தலையை துண்டிப்போம். பின்னர் அமெரிக்காவை முஸ்லீம் நாடாக மாற்றுவோம். அமெரிக்கா மட்டுமின்றி எங்கள் மீது குண்டு வீசி தாக்கும் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் குர்தீஷ் இன மக்கள் மீதும் தாக்கு தல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தான். குறிப்பாக  ஐரோப்பிய நாடுகளில் கார் குண்டுகள் வெடிகுண்டுகள் மூலம் தாக்குவோம் என வீடியோவில் தீவிரவாதி தெரிவித்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து