முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு விருது: அமைச்சர் பாராட்டு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று  தமிழ்நாடு வனத்துறையில் உள்ள உயர் அலுவலர்கள் உடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன்  தலைமையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.  மேற்காண் கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) . வினோத் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) முனைவர். எஸ். பாலாஜி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குனர், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள், தலைமை வனப்பாதுகாவலர்கள் மற்றும் வனப்பாதுகாவலர்கள்  கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர் அவர்கள் 2014-15-ஆம் நிதியாண்டில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரப்படும் பல்வேறு வன வளர்ச்சி திட்டப்பணிகளின் செயலாக்கத்தினை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார்கள்.  குறிப்பாக, தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையினை அதிகரிக்க 2013-14 மற்றும் 2014-15-ஆம் ஆண்டில் ரூ.49.18 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் 66 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் மாபெரும் மரம் நடவுத்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆய்வினை செய்து திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார்கள்.
 
மேலும், வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வன உயிரினங்களால் மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வனஉயிரினங்களுக்கு வனப்பகுதியில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில்  காப்புக்காடுகளில் தடுப்பணைகள், கசிவுசீர் குட்டைகள், நீர் தேக்கத் தொட்டிகள், நீர்துளைகள்,  குடிநீர்வசதிகள், செயற்கை நீர் வள ஆதார அமைப்புகள் ஏற்படுத்துதல், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் வாழ்விடங்களில் குடிநீர்வசதிகள் மற்றும் ஏற்கனவே, ஏற்படுத்தப்பபட்ட தடுப்பணைகள், கசிவுநீர்குட்டைகள், நீர்தேக்கத் தொட்டிகளை பராமரித்து மேம்படுத்துதல், வன உயிரினங்களால் மக்களுக்கு உண்டாகும் இன்னல்களைக் களைவது குறித்தும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். மேலும், வனப்பகுதியில் மரத் திருட்டு, வன விலங்கு வேட்டை, வனநில ஆக்கிரமிப்பு போன்ற வனக்குற்றங்கள் நிகழாதவாறு விழிப்புடன் களப்பணியாளர்கள் கண்காணிக்கவும் அமைச்சர்  அறிவுறுத்தினார்கள்.

இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் சிறந்த காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வாங்கியதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்தியாவிலேயே முதன் முறையாக குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு வனத்துறை பங்கேற்றதை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, மேலும் 2016-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வனத்துறையின் அணி வகுப்பினை சிறப்பாக செய்து பரிசு பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து