முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை குறைந்தாலும் ரயில் கட்டணம் குறைக்கப்படாது

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

பெங்களூர் - டீசல் விலை குறைந்துள்ள நிலையில் ரயில் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,
 
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி தாக்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். ரயில் பயணிகளிடம் பாதுகாப்பு படை அதிகாரிகள் தரைக்குறைவாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது ரயில் கட்டணம் குறைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரயில் பயணிகள் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் மட்டுமே ரயில்வே நிர்வாகம் பெற்று வருகிறது. இது தவிர ரயில் பயணிகளுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் கட்டணத்தை குறைக்க சாத்தியமில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து