முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பெரத் - பெர்த்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் கடைசி லீக் போட்டியில் 201 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனாலும் 201 ரன்களை எடுக்க இங்கிலாந்து திணறியது. கடைசியில் டெய்லர், பட்லர் இணைந்து ஸ்கோரை 191 ரன்களுக்குக் கொண்டு வந்தும் இருவரும் ஆட்டமிழந்தவுடன் சிறு பதட்டம் நிலவியது. கடைசியில் 46.5 ஓவர்களில் 201/7 என்று 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

66/5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை கதிகலக்கிய இந்திய அணி அதன் பிறகு ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் டெய்லர் ஆகியோரின் நிதானமான பேட்டிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. பவர் பிளே 36-வது ஓவர் தொடங்கும் போது இங்கிலாந்து 141/5 என்று வெற்றியின் சாயலை அடைந்திருந்தது. பவர் பிளேயில் ஏதாவது டிரிக் நிகழுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் வீசிய ஓவர்களை ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் நிதானமாகக் கையாண்டனர்.
 
மொயின் அலி, ரூட் ஆகியோர் 14/1 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை 40 ரன்களுக்கு உயர்த்தினர். மொயீன் அலி தனது வழக்கமான பாணி ஆட்டத்தை ஆட முடியவில்லை. பிட்ச் ஒரு காரணம், பந்து வீச்சும் ஒரு காரணம். 17 ரன்களை அவர் 34 பந்துகளில் எடுத்திருந்த போது அக்சர் படேல் பந்தை கேட்ச் ஆனார்.

மற்றொரு அபாய வீரரான ஜோ ரூட் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர் பின்னி வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை டிரைவ் ஆட அதனை கட்டுப்படுத்தத் தவறினார் பந்து நேராக பின்னியிடமே கேட்ச் ஆனது. 50 ரன்கள் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. கேப்டன் மோர்கன் 2 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர்ட் பின்னி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீச மோர்கன் தனது ஷாட்டை சற்றே செக் செய்ய பந்து மிட் ஆனில் தவனுக்கு எளிதான கேட்சாக முடிந்தது. இறுதியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து