முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலந்து டிவி நிலையத்துக்குள் புகுந்த நபர் கைது

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

திஹக் - ஹாலந்து நாட்டில் இயங்கி வரும் டச்சு டிவி நிலையத்துக்குள் ஒருவர் துப்பாக்கியை காட்டியபடி அதிரடியாக உள்ளே நுழைந்தான். உலகளவில் நடைபெறும் தாக்குதல் மற்றும் பல்வேறு சம்பவங்கல் குறித்து மக்களிடம் பேசவேண்டும் என்ற மிரட்டல் விடுத்தான். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவனை போலீசார் கைது செய்தனர்.

ஹாலந்து நாட்டின் தி ஹெக் நகரில் அரசு சார்பான என்ஓஎஸ் என்ற டிவி நிலையம் இயங்கி வருகிறது. இந்த டிவி நிலையத்தில் பிஜ்நாக்கர் நகரை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஒருவன் பாதுகாப்பு கட்டுப் பாடுகளை மீறி உள்ளே நுழைந்தான். அப்போது அங்கிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம், நான் உளவுத்துறையில் பணிபுரிகிறேன். பல்வேறு நாடுகளில் நிலவி வரும் தீவிரவாத தாக்குதல் குறித்து மக்களிடம் எடுத்து கூற விரும்புகிறேன். எனக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த டிவி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயத்துடன் சிதறி ஓடினார்கள். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. எனினும் அந்த இளைஞன் துப்பாக்கியை காட்டியபடி, எனக்கு நேரம் ஒதுக்கி தராவிட்டால், இணையதளத்துக்குள் ஊடுருவி செய்திகளை அழித்து தாக்குதல் நடத்த சுமார் நூற்றுக்கும் மேர்பட்ட ஹேக்கர்கள் தயார்நிலையில் உள்ளனர் என்று மிரட்டினான். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அந்த இளைஞன் இரவு 10 மணியளவில் போலீசாரிடம் சரணடைந்தான். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று ஹாலந்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் இம்மாத துவக்கத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹாலந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. டிவி நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி அந்த இளைஞன் எப்படி துப்பாக்கியை எடுத்து சென்றான் என்பது குறித்து  விசாரணை நடைபெறுகிறது என்று ஹில்வர்சம் நகர மேயர் பீட்டர் புரோட்ஜீஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து