முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண் பேடி மீதான புகார் நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண்பேடி மீது சுமத்தப்பட்ட புகாரை தேர்தல் ஆணையம் நிகாரித்தது.

டெல்லிக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கிரண்பேடி, டெல்லியின் வெவ்வேறு முகவரியுடன் இருவேறு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், கிரண் பேடிக்கு எதிரான புகாரை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நிராகரித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

கிரண் பேடிக்கு தால்கடோரா முகவரியிலும், உதய் பார்க் முகவரியிலும் வாக்காளர் அடையாள அட்டைகல் இருந்தன. எனினும் தால்கடோரா முகவரி கொண்ட அடையாள அட்டையை நீக்கக் கோரி அவர் ஏற்கெனவே விண்ணிப்பித்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், உதய் பார்க் வீட்டு முகவரியை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்தல் விதிகளை மீறி அவர் இரண்டு செல்லத்தக்க அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறும் புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை. அதனால் இந்த புகாரை நிகராகரித்து விட்டோம் என்றனர்.

இந்தியாவில் இரு வாக்காளர் இரண்டு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளுடன் வைத்திருப்பது, சட்டப்படி குற்றமாகும். இதனால், பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்குமோ என்ற கலக்கம் பாஜகவினரிடையே இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து